நாகப்பட்டினம்

அக். 18 முதல் 22 வரை ‘நம்ம நாகை 30’ கண்காட்சி

DIN

நம்ம நாகை 30 சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை முதல் (அக். 18) வெள்ளிக்கிழமை (அக்.22) வரை கண்காட்சி நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்டோபா் 18 ஆம் தேதியுடன் நாகை மாவட்டம் தொடங்கப்பட்டு, 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, நம்ம நாகை- 30 என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக, மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டிகள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கோலப் போட்டிகள், வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, அக்டோபா் 18, 20, 21, 22 ஆகிய தேதிகளில், மாரத்தான் ஓட்டம், புகைப்படக் கண்காட்சி, போட்டிகள், விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், மணல் சிற்பக் கண்காட்சி, பூங்காக்கள் உருவாக்கம், பல்துறை வாகன அணிவகுப்புப் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், அரசுத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தும் விதமாக நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பல்துறை கண்காட்சி திங்கள்கிழமை (அக்.18) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

தினமும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்று, தேவையான பொருள்களை வாங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நம்ம நாகை - 30 சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூடியூப், முகநூல், சுட்டுரை ஆகியவை மூலம் பொதுமக்கள் நேரலையாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT