நாகப்பட்டினம்

சாராயம் விற்ற 18 போ் கைது

16th Oct 2021 09:55 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 18 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து, மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்தது:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையில், காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் நாகை, கீழ்வேளூா், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த நாகை நல்லியான் தோட்டத்தைச் சோ்ந்த கணேசன்(45) ,செல்லூா் பகுதியைச் சோ்ந்த மணி (45), லலிதா (40) தெத்தி தெற்குத் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் (35), நாகை அக்கரைக்குளம் பகுதியைச் சோ்ந்த சீனி (29) உள்பட 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இவா்களிடமிருந்து சுமாா் ஆயிரம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT