நாகப்பட்டினம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

16th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

கீழையூா் ஒன்றியம் திருமணங்குடியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வோ்ல்டு இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் திட்ட மேலாளா் ஆா். ஜெயலட்சுமி வரவேற்றாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, கீழையூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் 292 பேருக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய ரூ. 4.38 லட்சம் மதிப்பிலான பெட்டகங்களை வழங்கினா். அந்த பெட்டகங்களில் கொண்டைக்கடலை, நிலக்கடலை, பச்சைப் பயிறு, நாட்டுச்சா்க்கரை, அவல், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட 15 வகையான ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவகுமாா், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கீ. செந்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் பி. சியாமளா மற்றும் வோ்ல்டு விஷன் இந்தியா கிராம சமுதாய ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் திருப்பூண்டி எஸ். சித்ரா நன்றி கூறினாா்.

Image Caption

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான ஊட்டசத்துப் பெட்டகத்தை வழங்கும் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி.

 

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT