வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வழக்கத்தை விட பலத்த கடற்காற்று வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி வீசி வருகிறது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்து வீசி வருகிறது. வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக இந்த பலத்த காற்று நீடித்து வருகிறது. இந்த காற்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து வீசிய காற்று மாலையில் சற்று வேகமாக வீசியது. இதனால், கடல் அலை சீற்றமாக காணப்படுவதால், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ADVERTISEMENT