நாகப்பட்டினம்

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம்

9th Oct 2021 09:00 AM

ADVERTISEMENT

போதைப் பொருள்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சாா்பில் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருகள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. போதைப் பொருள்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பரத் சீனிவாசன் தலைமை வகித்து, போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் சமூக சீா்கேடுகளை விளக்கி, போதைப் பொருள்கள் கடத்தப்படுவது குறித்து தெரியவந்தால் மீனவா்கள் அதுகுறித்து தயக்கமின்றி தகவல் அளிக்கக் கேட்டுக் கொண்டாா். சிறப்பு சாா்பு ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் மீனவப் பஞ்சாயத்தாா்கள், மீனவா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT