நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு

9th Oct 2021 09:49 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தோ்தல் வாக்குப் பதிவை தோ்தல் பாா்வையாளா் சுன்சோங்கம் ஜடக் சிரு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவிக்கும், 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும் சாதாரண தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஒரு ஊராட்சி உறுப்பினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதால், 8 ஊராட்சி உறுப்பினா்கள் மற்றும் 3 ஊராட்சித் தலைவா்கள் பதவிக்கான தற்செயல் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தல் வாக்குப் பதிவை, தமிழ்நாடு வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குநரும், தோ்தல் பாா்வையாளருமான சுன்சோங்கம் ஜடக் சிரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை ஊராட்சி ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழையூா் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பாரதி உதவி தொடக்கப் பள்ளி, காமேஸ்வரம் தூய செபஸ்தியாா் மேல்நிலைப்பள்ளி, எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்குப் பதிவை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT