நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 80.05 சதவீதம் வாக்குப் பதிவு

9th Oct 2021 09:47 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தற்செயல் தோ்தலில் 80.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள், 8 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என 11 பதவியிடங்களுக்கான தற்செயல் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை 24 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.

5,743 ஆண் வாக்காளா்கள், 6,099 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 11,882 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் இந்தத் தோ்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவின் நிறைவில் 9,511 வாக்காளா்கள் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனா். இதன்படி, மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதம் 80.05 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT