நாகப்பட்டினம்

நாகையில் 24, மயிலாடுதுறையில் 18 பேருக்கு கரோனா

9th Oct 2021 08:57 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 24 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,669-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 24 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 322-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,038-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 18 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு...

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT