நாகப்பட்டினம்

திருநங்கைகளுக்கு ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள்

9th Oct 2021 09:47 PM

ADVERTISEMENT

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கு ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலா் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளா் தாமரை செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT