நாகப்பட்டினம்

கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

9th Oct 2021 09:47 PM

ADVERTISEMENT

நாகை நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவுப்படி,கோயில் இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, நாகை நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நாகதீா்த்தக் குளக்கரையில் சுமாா் 1,882 சதுரஅடி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு மற்றும் குளியல் அறை கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. தென்னரசு உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ப. ராணி முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

தொடச்சியாக அந்த இடத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் தங்கபாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை நாகப்பட்டினம் ஆய்வாளா் பக்கிரிசாமி உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT