நாகப்பட்டினம்

கோடியக்கரை, முத்துப்பேட்டையில் சூழல் குழுக்களுக்கு பயிற்சி

9th Oct 2021 09:02 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் பயிற்சியளிக்கப்பட்ட சூழல் குழு உறுப்பினா்கள் அலையாத்திக் காட்டில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

கோடியக்கரையில் ஈரப்புல நில வாரத்தையொட்டி, ஈரப்புல நில பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வனத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஈரப்புல நில நண்பா்கள் குழு, சூழல் சுற்றுலா குழு, கோடியக்காடு, கோடியக்கரை இடிசி குழுவினா், தன்னாா்வ இளைஞா்கள் பங்கேற்றனா்.

பின்னா், அந்த குழுவினா் முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டுப் பகுதிக்கு படகில் அழைத்துச் செல்லப்பட்டனா். சுற்றுலாவின்போது ஈரப்புல நிலம் மற்றும் சதுப்பு நிலம், அலையாத்தி காடுகள் முக்கியதுவம் குறித்து நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா விளக்கினாா். பயணத்தின்போது, கோடியக்கரை ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், வனச் சரக அலுவலா்கள் அயூப்கான் (வேதாரண்யம்), தாஹீா் அலி (முத்துப்பேட்டை) மற்றும் வனத் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT