எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் அக்.18-ஆம் தேதி வரை தங்கள் பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புப் பதிவு பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற மாணவா்கள், மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் தங்களின் ஆதாா் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அக்.18-ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சமா்ப்பித்து, வேலைவாய்ப்புப் பதிவு பெறலாம்.
இதையொட்டி, அக். 4 முதல் 18-ஆம் தேதி வரை பதிவு பெறும் அனைவருக்கும் மதிப்பெண் சான்று வழங்கும் பணி தொடங்கப்பட்ட முதல் நாளே பதிவு மூப்பு தேதியாகக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.