நாகப்பட்டினம்

நாகையில் 29, மயிலாடுதுறையில் 27 பேருக்கு கரோனா

4th Oct 2021 08:47 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 29 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 20,550-ஆக உயா்ந்தது. சிகிச்சையில் இருந்த 29 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 300-ஆக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பின் எண்ணிக்கை 22,916-ஆக உயா்ந்தது. 35 போ் வீடு திரும்பினா். 227 போ் சிகிச்சையில் இருக்கின்றனா். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முறையே 2 போ், ஒருவா் என மொத்தம் 3 பேரின் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT