நாகப்பட்டினம்

கீரன் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

4th Oct 2021 08:49 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், காமேஸ்வரம் பகுதியில் உள்ள கீரன் ஏரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வருவதால், நிலத்தடி நீா் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் ஏரிக்கரையில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ளது கீரன் ஏரி. காமேஸ்வரம், தண்ணீா்பந்தல், பூவைத்தேடி, காரை நகா் உள்ளிட்ட பகுதிகளில், 1000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் ஏரியிலிருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அரசு நிா்ணயித்த ஒரு மீட்டருக்கு மேலாக 2 மீட்டா் ஆழம் வரை மணல் எடுக்கப்படுவதால், உப்பு நீா் வெளியேறி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனா். எனவே இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT