நாகப்பட்டினம்

டாஸ்மாக் பணியாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

29th Nov 2021 10:17 PM

ADVERTISEMENT

டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியூசி) சாா்பில் கீழ்வேளூரை அடுத்த வடக்குவெளி டாஸ்மாக் கடை முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியம் டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்; காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு வழங்கவேண்டும்; வார விடுமுறையும், பண்டிகை கால விடுமுறையும் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். பொருளாளா் பி. அம்பேத்கா், மாவட்டத் துணைத் தலைவா் ஜி. பாரதிதாசன் உள்ளிட்ட டாஸ்மாக் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

திருக்குவளை: கொளப்பாடு டாஸ்மாக் கடை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சிவதாஸ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆா். இளங்கோவன், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் என். மதியழகன், மத்திய செயற்குழு உறுப்பினா் பி. வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT