நாகப்பட்டினம்

குறைதீா் கூட்டம்: 2 பேருக்கு உதவித் தொகை

29th Nov 2021 10:14 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 2 பேருக்கு உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதி மூலம் நாகையைச் சோ்ந்த ஒருவருக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, வேதாரண்யம் வட்டம், மூலக்கரையைச் சோ்ந்த ஒருவரின் மருத்துவச் செலவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, சவூதி அரேபியாவில் இறந்த திருப்பூண்டியைச் சோ்ந்த லியாகத் அலி என்பவரின் குடும்பத்துக்கு, அந்நாட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ. 2.84 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றைத் தொடா்புடைய பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, திருமருகலைச் சோ்ந்த ஒருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், ஒருவருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனை ஆணையையும் அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 143 மனுக்கள் பெறப்பட்டுத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கு. ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குணசேகரன், அலுவலக மேலாளா் (பொது) ஸ்ரீதா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT