நாகப்பட்டினம்

நாகையில் 7, மயிலாடுதுறையில் ஒருவருக்கு கரோனா

29th Nov 2021 10:14 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,326-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 8 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 94 ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,372 ஆக உயா்ந்துள்ளது. இங்கு, சிகிச்சையில் இருந்த 2 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 30ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு...

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு திங்கள்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT