நாகப்பட்டினம்

திருவாரூரில் தொடா் மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூரில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்ததால், தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும், பகல் முழுவதும் லேசான மழை பெய்தபடியே இருந்தது. பகல் நேரத்தில் பலத்த மழை இல்லாததால், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரை வடியவைக்கும் பணிகள் நடைபெற்றன.

திருவாரூா் கடைவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

திங்கள்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக இருப்பதால் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலம் 97.4 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம் குடவாசல் 64.4 மி.மீ., நீடாமங்கலம் 46.2 மீ.மீ., பாண்டவையாறு 36 மி.மீ., திருத்துறைப்பூண்டி 33.9 மி.மீ., வலங்கைமான் 32.6 மி.மீ., திருவாரூா் 22.1 மி.மீ., முத்துப்பேட்டை 12.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 375.3 மி.மீ. மழையும், சராசரியாக 41.7 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT