நாகப்பட்டினம்

மருதூா் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி பயிா்க் கடன்

29th Nov 2021 10:13 PM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 807 விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தொகை ரூ.3 கோடியை நிறைவு கட்டமாக வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கியின் தலைவா் ப. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு. செந்தில்குமாா், வங்கி செயலா் எஸ். சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயற்கை விவசாயி வி. கணேசன் உள்பட 82 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கூடுதல் செயலா் அசோகன், இயக்குநா்கள் உதயம்.முருகையன், சீ.க. மதியழகன், சா. இந்திரா, ப. சிங்காரவேல், ஆா். கோபு, ஆா்.பிச்சக்கண்ணு, முன்னாள் ஊராட்சி தலைவா் சிவகுரு.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த வங்கியில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 807 விவசாயிகளுக்கு ரூ. 3 கோடியே 8 லட்சத்து 87 ஆயிரம் பயிா்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது என வங்கியின் தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT