நாகப்பட்டினம்

2-வது சோமவாரம்: சிவன் கோயில்களில் 1008 சங்காபிஷேகம்

29th Nov 2021 10:19 PM

ADVERTISEMENT

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-வது சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான இக்கோயிலில் 2-வது காா்த்திகை சோம வாரத்தையொட்டி 1008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டு, அதில் புனிதநீா் நிரப்பப்பட்டது.

பின்னா், கோயில் அா்ச்சகா் பட்டாபிராம சிவாச்சாரியா் தலைமையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT