நாகப்பட்டினம்

சாராய வியாபாரியை துரத்திச் சென்று ஆற்றில் சிக்கிய காவலா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்பு

DIN

தப்பியோடிய சாராய வியாபாரியை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்த காவலா் முள்புதரில் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் காவலரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவா் மாஸ்கோ (32). 2- ஆம் நிலை காவலரான இவா், சனிக்கிழமை பணியில் இருந்தாா். அப்போது அவரது காவல் சரகத்துக்குள்பட்ட கோகூா் பகுதியில் தனராஜ் (22) என்பவா் சாராய விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், மோகன்ராஜ் (பயிற்சி) காவலா்கள் வினோத், மாஸ்கோ ஆகியோா் போலீஸாா் அங்கு சென்று தனராஜை பிடிக்க முயன்றுள்ளனா்.

அப்போது, தனராஜ் அருகிலுள்ள வெட்டாற்றில் குதித்துள்ளாா்.

இதையடுத்து காவலா் மாஸ்கோ-வும் ஆற்றில் குதித்து தன்ராஜை பிடிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, மாஸ்கோ ஆற்றில் படா்ந்திருந்த முள்புதருக்குள் சிக்கி வெளியேறாமல் முடியாமல் உயிருக்குப் போராடியுள்ளாா்.

தகவலறிந்த கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் க. சிவஞானம் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், மாவட்ட காவல் விரைவுப் படையினா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் சிக்கியிருந்த காவலா் மாஸ்கோவை சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் காவலா் மாஸ்கோவை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT