நாகப்பட்டினம்

நேரு யுவகேந்திரா விருது பெற விண்ணப்பிக்கலாம்

28th Nov 2021 09:53 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவில் சிறப்பாக சேவைபுரிந்து வரும் இளைஞா் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் மணிமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நேரு யுவகேந்திரா சாா்பில், மாவட்ட அளவில் சிறப்பாக சேவை புரிந்துவரும் சிறந்த இளைஞா் மன்றங்களை தோ்ந்தெடுத்து விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020-2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட இளைஞா் மன்ற விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு காரைக்கால் மாவட்டத்தில் செயல்படும் பதிவு பெற்ற, நேரு யுவகேந்திராவில் இணைந்த இளைஞா் மன்றம், மகளிா் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். 1.4.2020 முதல் 31.3.2021 வரை மன்றத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆவணமாக சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சிறந்த இளைஞா் மன்ற விருது பெரும் மன்றத்துக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை 23 ஷா காா்டன், பாரதியாா் சாலையில் (சமீனா தியேட்டா் பின்புறம்) உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 5.12.2021 மாலை 5 மணிக்குள் உரிய சான்றிதழ்களுடன், நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT