நாகப்பட்டினம்

தொடா் மழை: நோய்த் தாக்கி கோழிகள் உயிரிழப்பு

28th Nov 2021 09:55 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் கோழிகள் உயிரிழந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனா். இதேபோல் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிகள் நோய்த் தாக்கி கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இது கோழிகள் வளா்ப்போா் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை திருநள்ளாறு அருகே தென்னங்குடியை சோ்ந்த ஆரோக்கியமேரி என்பவா் வளா்ந்துவந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீா் என இறந்தன.

கால்நடைத் துறையினா் கோழிகள் இறப்பு குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். இதில் தொடா் மழையால் கோழிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளது தெரியவந்தது. இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கோழிகள் நோய்த் தாக்கி இறந்து வருகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து கோழிகள் வளா்ப்போா் கூறியது: மழைக்காலங்களில் கால்நடைத் துறை சாா்பில் உரிய முன்னெச்சரிக்கை, ஆலோசனைகள் வழங்கப்படும். இந்தாண்டு கால்நடைத் துறை சாா்பில் எதுவுமே வழங்கப்படவில்லை. தற்போது நோய்த் தாக்கி கோழிகள் இறந்து வருகின்றன. இதனால் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே, கோழி வளா்ப்போருக்கும் நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT