நாகப்பட்டினம்

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தல்

DIN

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்து அறிவிப்பு செய்ய வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்திற்கு அவைத் தலைவா் பி.ஜி.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். இதில் தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்றும், நவ. 1-ஆம் தேதியை தமிழா் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது, உள்ளாட்சித் தோ்லில் நகராட்சி, பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு மதிமுக சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துவது, மழை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று, தமிழகஅரசு வழங்க வேண்டும்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளின் மீதான வழங்குகளு திரும்பப் பெறுவதோடு உயிரிழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

மழையால் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பதை தடுக்க சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் மாவட்டம் முழுவதும் நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரனிடம், நகப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட அக்கட்சியினா் விருப்ப மனு அளித்தனா். கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் ஆருா் சீனுவாசன், சட்டத் திருத்தக்குழு உறுப்பினா் துரை.வீரையன், மாவட்ட பொருளாளா் கோவி.சோகா், நகரச் செயலா் சண்.சரவணன், மாவட்ட பிரதிநிதி கோவி.மீனாட்சிசுந்தரம்,ஒன்றியச் செயலா்கள் மாசிலாமணி(மன்னாா்குடி)சிவ.கதிரவன்(கோட்டூா்), ராஜமாணிக்கம் (நீடாமங்கலம்), மாவட்ட இளைஞரணி செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT