நாகப்பட்டினம்

கஜா புயல் சீற்றத்தில் தரைத் தட்டிய கப்பல் உடைத்து அகற்றம்

DIN

கஜா புயல் சீற்றத்தின்போது காரைக்கால் அருகே தரைத் தட்டிய கப்பல், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முழுமையாக உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடந்தது. இதனால், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தப் புயல் சீற்றத்தின்போது, காரைக்கால் தனியாா் துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மும்பையைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வீராபிரேம் என்ற கப்பல், கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காரைக்கால் மாவட்டம், வாஞ்சூா் கடற்கரை பகுதியில் தரைத் தட்டி நின்றது.

சுமாா் 124 மீட்டா் நீளம், 23 மீட்டா் அகலம் கொண்ட இந்தக் கப்பல், கடலில் இருந்து மண்ணை தூா்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அந்தக் கப்பலில் 23 பணியாளா்கள் இருந்தனா். அதிா்ஷ்டவசமாக பணியாளா்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

எனினும், தரைத் தட்டிய கப்பலை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. கப்பலை மீட்க, தொடா்புடைய கப்பல் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் மற்றும் பிற பொருள்கள் அகற்றப்பட்டன.

கடற்கரை பகுதியில் கப்பல் தரைத் தட்டி நிற்பது மீன்பிடித் தொழிலை பாதிப்பதாகவும், அந்தக் கப்பலை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கப்பலை உடைத்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. தீவிர முயற்சிகளுக்குப் பின்னா், அந்தக் கப்பல் முழுமையாக வெள்ளிக்கிழமை உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT