நாகப்பட்டினம்

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவராணம் வழங்க சிபிஐ வலியுறுத்தல்

DIN

தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவராணம் வழங்க வேண்டுமென சிபிஐ வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

கீழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிபிஐ ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில், தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும், தொடா்மழையால் விவசாய பணிகள் இல்லாமல் உள்ள விவசாயத் தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், 2020-2021-ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை கீழையூா், திருவாய்மூா், திருப்பூண்டிமேற்கு, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமவடி, பிரதாபராமபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு 0 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்க வழிவகை செய்யவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.3-ஆம் தேதி கீழையூரில் சாலை மறியலில் ஈடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி உறுப்பினா் எம். ஹாஜா அலாதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வீ. சுப்ரமணியன், சிபிஐ ஒன்றிய குழு உறுப்பினா் ஏ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT