நாகப்பட்டினம்

வெளி மாநில மதுவிற்பனை குறித்து புகாா் அளிக்கலாம்: ஆட்சியா்

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் எங்கேனும் வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலாவது கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை, மதுபானங்கள் பதுக்கல், மதுபானக் கடத்தல், கள்ளச்சாரயம் காய்ச்சுதல், வெளி மாநில மதுபானங்கள் விற்பனை போன்ற குற்றங்கள் நடைபெற்றால் அதுகுறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் சென்னை கூடுதல் காவல் துறை இயக்குநா் (அமலாக்கம்) அலுவலகத்துக்குத் தகவல் அளிக்கலாம் அல்லது 94450 74586 என்ற எண்ணில் மாவட்ட கலால் உதவி ஆணையருக்கு வாட்ஸ்ஆப் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT