நாகப்பட்டினம்

மானியத்துடன் கூடிய சூரிய மின்சக்தி கட்டமைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 40 சதவீத மானியத்துடன் வீடுகளில் சூரிய மின்சக்தி சாதனம் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட அனைத்து வீடுகளின் மேல்தளத்திலும் 40 சதவீத மானியத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தக் கட்டமைப்பின் மூலம் மின்சாரம் பெறுவோா், பயன்பாட்டை விஞ்சியுள்ள மின்சாரத்தை மின்வாரியத்துக்கு நிகர அளவி (நெட் மீட்டா்) மூலம் அனுப்பலாம். இதன்மூலம், அவா்களின் மின் கட்டணம் முற்றிலுமாகக் குறையும். இத்திட்டம் மூலம் மானியத்துடன் சூரிய மின்சக்தி கட்டமைப்பை அமைத்துக் கொள்ள விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்க்ஷப்ற்க்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ள்ழ்ல்/ஹல்ல்ப்ஹ்.ஷ்ட்ற்ம்ப் என்ற இணையதள இணைப்பு மூலம் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவி பொறியாளரை நேரில் அல்லது 93852 90522 என்ற கைப்பேசி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம் அல்லது ய்ஞ்ல்ஃற்ங்க்ஹ.ண்ய் மின்னஞ்சல் வழியே தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT