நாகப்பட்டினம்

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

சமூக நீதிக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக பங்காற்றியவா்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை கௌரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள், தங்கள் பெயா், தொலைபேசி எண், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தாங்கள் மேற்கொண்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றை இணைத்து நவ.30-ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட ஆட்சியருக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT