நாகப்பட்டினம்

அவ்வையாா் அரசு கல்லூரி பி.காம் பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அவ்வையாா் அரசு கலைக் கல்லூரி மாணவா் சோ்க்கை கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (நவ. 26) இறுதி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கான ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் காரைக்கால் அமைப்பாளா் ந. வியாசராயா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழ் கல்வியாண்டில் பி.காம் (பொது) பாடப்பிரிவுக்கு, அவ்வையாா் அரசு மகளிா் கல்லுாரிக்குக் கூடுதலாக 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை புதுவை அரசால் வெளியிடப்பட்டு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விருப்பம் உள்ள மாணவியா் வெள்ளிக்கிழமை மாலைக்குள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹல்ஹள்ஸ்ரீந்ந்ப்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பதாரா்கள் பட்டியல் வரும் 28-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டு, நவம்பா் 30-ஆம் தேதி அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு நடத்தப்படும்.

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT