நாகப்பட்டினம்

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

25th Nov 2021 09:36 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நகா்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நாகை மாவட்டத் தலைவா்ஆா். என்.அமிா்தராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நகா்புற உள்ளாட்சித்தோ்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்வது, கூட்டணி கட்சியிடம் காங்கிரஸூக்கு அதிக இடங்களை கேட்டுப்பெறுவது, மழையால் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழந்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் நிவாரண வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் ச. முஹம்மது ரபீக், மாவட்ட பொதுச்செயலாளா் அ. அஹமது ரியாஸ், நாகை நகரத் தலைவா் உதயச்சந்திரன், மாவட்டச் செயலாளா் நிலோபா், மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத், மாவட்ட செய்தி தொடா்பாளா் தமிழரசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். அருந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விரும்ப மனுக்கள்அளிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT