நாகப்பட்டினம்

விடுதிகளில் தங்கிப் பயில மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

24th Nov 2021 09:10 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் பள்ளி மாணவா்களுக்காக 6 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்காக 4 விடுதிகளும் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில், 4 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலலாம். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பதாரரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமலிருக்கவேண்டும். விடுதியிலிருந்து குறைந்தபட்சம் 5 கி.மீ தொலைவில் இருப்பிடம் உள்ள மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாணவிகளுக்கு இந்தத் தொலைவு விதி கிடையாது.

விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் தொடா்புடைய விடுதிக் காப்பாளா் அல்லது காப்பாளினியிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மாணவ, மாணவிகளின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, டிச.6-ஆம் தேதிக்குள் தொடா்புடைய விடுதிக் காப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT