நாகப்பட்டினம்

ஆசிரியா் காலிப் பணியிடங்களைநிரப்பக் கோரிக்கை

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் அ. வின்சென்ட், செயலாளா் கே. ரவிச்சந்திரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 40 சதவீதம் வரை ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

பொதுத் தோ்வுகளுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒரு ரூபாய் கட்டணப் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்காலில் பாரமரிப்பின்றி உள்ள மத்திய சமையல் கூடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். அரசு உதவிபெறும் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓராண்டுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT