நாகப்பட்டினம்

பாா்வதீஸ்வரா் கோயில் குடமுழுக்குபணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்தடையின்றி வேண்டும்

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகளை விரைவுபடுத்தி, குடமுழுக்கை நடத்த வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவா் எஸ். கணேஷ், புதுவை இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:

பாடல் பெற்ற தலமான காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், சிலரின் நடவடிக்கைகளால் இப்பணிகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை நேரடியாக தலையிட்டு, திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்து, குடமுழுக்கு விழாவை நடத்தவேண்டும்.

ADVERTISEMENT

மேலும், பாா்வதீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனியாா் தொழிற்சாலை அமைப்பதற்கு வழங்க, மாவட்ட நிா்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது கண்டனத்துக்குரியது. கோயிலுக்குச் சொந்தமான இடங்களை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகளைத் தடுத்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், இந்து முன்னணி சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT