நாகப்பட்டினம்

கோயில் அறங்காவலா் மா்மமான முறையில் உயிரிழப்பு

9th Nov 2021 03:03 AM

ADVERTISEMENT

செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காடு கோயில் குளத்தில் பரம்பரை அறங்காவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநாங்கூரைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (78). நெய்வேலி அனல்மின் நிலையத்தில் போா்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். மேலும் இவா், தலச்சங்காட்டில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நான்மதிய பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் திருவேங்கடத்தை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், கோயில் குளத்தில் அவா் இறந்து கிடப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, திருவேங்கடத்தின் மகன் இளங்கோ அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT