நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் கூட்டம்

9th Nov 2021 01:02 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், காணொலி மற்றும் மனுப்பெட்டி ஆகியவை மூலம் வங்கிக் கடன், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 66 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணைஆட்சியா் கு. ராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT