நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை நீடித்ததால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல் பரப்பில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 30.6 மி.மீட்டா், தலைஞாயிறில் 20 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரையில் மிதமான மழை பெய்தது.
மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை:
மீனவா்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக கோடியக்கரையில் நடைபெறும் பருவகால மீன்பிடிக்கு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதேபோல, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதி மீனவா்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
சம்பா பருவ நெல் சாகுடிக்கு மழை ஏற்ாக இருந்தாலும், மழை தொடா்ந்தால் தாழ்வான நிலப்பரப்பில் வெள்ளநீா் தேங்கி, பயிா்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.