நாகப்பட்டினம்

நாகை , கீழ்வேளூா் பகுதிகளில் ரூ. 2. 66 லட்சம் ரொக்கம் பறிமுதல்

31st Mar 2021 11:08 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 2. 66 லட்சம் ரொக்கம் மற்றும் 1.10 லட்சம் மதிப்பிலான 6 செல்லிடப்பேசி ஆகியவற்றை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்டஆட்சியருமான பிரவீன் பி. நாயா் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு மற்றும் விடியோ கண்காணிப்புக்குழுவினா் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மீனாட்சி தலைமையிலான குழுவினா் உரிய ஆவணஙகளின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் நாகூா் தெத்தி அடுத்த வைரவனிருப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாரிவேந்தா் தலைமையிலான பறக்கும் படையினா் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 62,500 ரொக்கத்தையும், நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.10 லட்சம் மதிப்புள்ள 6 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

கீழ்வேளூரில் ... இதேபோல் கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கானூா் சோதனைச் சாவடி மற்றும் குருக்கத்தி ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா் உரியஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ . 1. 04 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ ,1, 62,500ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசிகள்தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான முருகு வசம் ஒப்படைக்கப்பட்டது. கீழ்வேளூா் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1.04 லட்சம் ரொக்கம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT