நாகப்பட்டினம்

விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது

DIN

வாய்க்கால் தூா்வாராததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாததைக் கண்டித்து விவசாயிகள் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட காருகுடி, கீரம்போ், வல்லம், உரங்குடி, வடக்குவெளி, அகரவெளி, சின்னகாருகுடி, பெரியகாருகுடி ஆகிய கிராமங்களில் இருந்து செல்லும் தலைப்பு வாய்க்கால் கொடியாலத்தூா், கீரம்போ் தலைப்பிலிருந்து இதுவரை தூா்வாராததால் மேற்குறிப்பிட்டுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை.

எனவே, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில், ஜூலை 27-ஆம் தேதி திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா். இந்நிலையில், விவசாயிகளின் போராட்ட அறிவிப்பு குறித்து திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாா் தலைமையில் சனிக்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் எஸ். செல்வகுமாா் பங்கேற்று, விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT