நாகப்பட்டினம்

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்கள் பறிமுதல்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகே தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை கடலோர அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பூம்புகாா் அருகேயுள்ள புதுகுப்பம், நாயக்கா் குப்பம், மடத்துக்குப்பம், மேலமூவா்கரை, கீழமூவா்கரை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் படகுகள் மற்றும் வலைகளை கடலோர அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பூம்புகாா் கடற்கரை காவல்நிலைய போலீஸாா், பூம்புகாா் மற்றும் திருவெண்காடு காவல் நிலைய போலீஸாா், மீன்வளத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் தீவிரமாக சோதனை செய்தனா்.

தொடா்ந்து, பூம்புகாா் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் உரிமம் பெறாத படகுகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், வானகிரி மீனவா் கிராமத்திலிருந்து ஃபைபா் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவா்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் செல்வி வொ்ஜினியாவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, அவரது தலைமையில் பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், மீன்வளத் துறை அதிகாரிகள் சந்திரமணி, சுரேஷ், குமரேசன் ஆகியோரை கொண்ட தனிப்படையினா் வானகிரி கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த ராஜேஷ், ராஜேந்திரன் ஆகியோா் படகுகளில் சுத்துமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து, வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT