நாகப்பட்டினம்

குடியிருப்புக்குச் செல்லும் பாதை அடைப்பு: கிராமத்தினா் சாலை மறியல்

DIN

வேதாரண்யம் அருகே குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து, கிராமத்தினா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகட்டூா், பெத்தாச்சிக்காடு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கு அங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. அங்கு, அரசு திட்டத்தில் கட்டப்பட்ட 3 வீடுகள், புதிதாக கட்ட அனுமதிக்கப்பட்டுள்ள 2 வீடுகள் உள்ளிட்ட 7 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனா். அரசு குடிமனைப் பட்டா வழங்கிய போதிலும், அங்கு செல்ல பாதை அமைக்கப்படவில்லை. இதனால், அருகில் உள்ள வாய்க்கால் கரையில் இருந்து தனியாா் நிலம் வழியாக உள்ள பாதையை இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், தனியாா் நிலம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு கம்பி வேலியால் பாதை அடைக்கப்பட்டது. இதுகுறித்து, அங்கு வசிப்பவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையல், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் ரமாதேவி, துணைக் காவல் கண்காணிப்பாளா் மகாதேவன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை விலக்கிக்க கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT