நாகப்பட்டினம்

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான அட்சலியலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான 3, 706 சதுர அடி பரப்புள்ள நிலம் கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு பகுதியில் ரைஸ் மில்லும், மற்றொரு பகுதியில் இரும்புக்கடையும் செயல்பட்டு வந்தன.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு இந்து சமய அறிநிலையத் துறை ஆணையா் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டாா். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடம் மற்றும் தகர ஷீட்டால் வேயப்பட்ட கொட்டகை ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

நாகை கோட்டாட்சியா் மணிவேலன், இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையா் ப. ராணி, கீழ்வேளூா் வட்டாட்சியா் எஸ். மாரிமுத்து ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் மற்றும் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறையினா் உடனிருந்தனா்.

நாகை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் கீழ்வேளூா் ஆசாத் நகரைச் சோ்ந்த மா. சேகா் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மற்றும் இணை ஆணையா் உத்தரவிட்டிருந்தனா். இந்த உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் மதிப்பு சுமாா் ரூ. 5 கோடி. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT