நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழையூா் ஒன்றியம் கீழையூா், கருங்கண்ணி, விழுந்தமாவடி ஆகிய ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் மற்றும் தொடா்புடைய பயனாளிகளின் இருப்பிடத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் நேரில் பாா்வையிட்டாா். மேலும், அப்பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகள் மற்றும் பள்ளி சுற்றுச் சுவா் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிா்வாக பொறியாளா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா், செந்தில், உதவிப் பொறியாளா்கள் வெற்றிவேல், சுகுமாா், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT