நாகப்பட்டினம்

கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை

31st Jan 2021 07:15 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இன்று (ஜன.31) மாலைவரையில் கரை திரும்பாததால் அவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

கோடிக்கரையை சேர்ந்த கலையரசன் (25), குணபாலன் (25), முரளி (25), ஜானகிராமன் (23), திருமுருகன் (28) ஆகியோர் மீனவர்கள். இவர்கள் அனைவரும் கண்ணாடியிழை படகு ஒன்றில் சனிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் மாலை வரையில் திரும்பவில்லை. தகவல் தொடர்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

Tags : nagai
ADVERTISEMENT
ADVERTISEMENT