நாகப்பட்டினம்

நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் அறுவடை இயந்திரம் வேளாண்துறை வேண்டுகோள்

31st Jan 2021 01:46 AM

ADVERTISEMENT

நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரத்தை அளித்து உதவ, இயந்திர உரிமையாளா்களை வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ.செந்தில்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை நிா்ணயம் செய்து செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில், தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள், விவசாயப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் நடப்பு ஆண்டுக்கு தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை, கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புதலோடு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெல்ட் பொருத்திய நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒருமணி நேரத்துக்கு ரூ. 2,300 முதல் ரூ. 2,600 வரை, டயா் பொருத்திய இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,800 வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT