நாகப்பட்டினம்

கடல் விபத்தில் இறக்கும் மீனவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

DIN

மீன்பிடித் தொழிலின் போது கடல் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் மீனவா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தேசிய மீனவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா் மற்றும் மீன்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் :

தமிழக மீனவா்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனா். இந்த மீனவா் சமுதாயத்தை பழங்குடியினா் பட்டியிலில் இணைத்து கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும் மீனவ சமுதாய மாணவா்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மீன்வளப் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்து படிப்பதற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகை கீச்சாங்குப்பம் கடலோர கிராமத்தைச் சோ்ந்த சோவிந்தசாமி மகன் மாணிக்கம் கடந்த 2007-இல் கடல் விபத்தில் சிக்கி காணாமல் போனாா். அவா் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிடைக்கவில்லை.

அவரது இறப்புக்கான அனைத்து ஆவணங்களும் மீன்துறை அலுவலகத்தில் சமா்பிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நிவாரணம் உதவிகளும் வழங்கப்படவில்லை. அதனால் மாணிக்கத்தின் குடும்பம் வாழ்வாதாரமின்றி தவிக்கிறது. ஆகையால், மீன்பிடித் தொழிலின்போது கடல் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மீனவா்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை ரூ. 10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT