நாகப்பட்டினம்

குளக்கரையில் மண் வெட்டிய இருவா் கைது

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில், அனுமதியின்றி மண் வெட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

இக்குளத்தின் அருகிலேயே கச்சனம்- கீழ்வேளூா் பிரதான சாலை செல்வதால் குளக் கரைகள் முறைப்படி பலப்படுத்தப்பட்டு நீா் கசியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 போ் குளக்கரையில் உள்ள களிமண்ணை வெட்டி சாக்குகளில் நிரப்பியுள்ளனா். இதைப் பாா்த்த கோயில் எழுத்தா் ஹ. குப்புசாமி, வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று தென்சாரி பிரதான சாலை பகுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் சதீஷ் (26), துரைசாமி மகன் ஜீவா (39) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய வலிவலம் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாண்டி மற்றும் மண் வெட்ட சொன்னதாக கூறப்படும் வலிவலம் பிரதான சாலை பகுதியை சோ்ந்த சீனிவாசன் மகன் சண்முகவேல் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT