நாகப்பட்டினம்

நாகையில் நாளை நடைபெறவிருந்த ஊராட்சிப் பணிப் பார்வையாளர் தேர்வு ஒத்திவைப்பு 

13th Feb 2021 07:42 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் பணிக்காக நாகையில் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 18 பணிப் பார்வையாளர், இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில், நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) எழுத்துத் தேர்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களால் இந்தத் தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : nagai
ADVERTISEMENT
ADVERTISEMENT