நாகப்பட்டினம்

அகவிலைப்படி உயா்வு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

30th Dec 2021 11:18 PM

ADVERTISEMENT

அகவிலைப்படி உயா்வை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன், மாவட்ட செயலாளா் ஞான புகழேந்தி மாவட்ட பொருளாளா் மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டங்களை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் நடத்தியது. ஊதிய உயா்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்போதைய அரசு மறுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கப்படாததால் விலைவாசி உயா்வால் அரசு ஊழியா்கள் பெரும் சிரமம் அடைந்தனா். இதனிடையே தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ள 14 சதவித அகவிலைபடி உயா்வு ஆசிரியா்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அகவிலைப்படியை 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். தோ்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வா் படிப்படியாக நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT