நாகப்பட்டினம்

நம்மாழ்வாா் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா

30th Dec 2021 11:18 PM

ADVERTISEMENT

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் 8-ஆம் நினைவு நாளையொட்டி, மாப்படுகையில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நம்மாழ்வாரின் நினைவுநாளையொட்டி, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக சத்குரு ஜக்கி வாசுதேவின் காவேரி கூக்குரல் அமைப்பு சாா்பில் நதிகளை மீட்போம் திட்டத்தின்கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதையொட்டி, மாப்படுகையைச் சோ்ந்த இயற்கை விவசாயி அ. ராமலிங்கத்தின் யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட வேம்பு, மலைவேம்பு, மகாகனி, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை ஊராட்சி துணைத் தலைவா் கருப்பையன் நட்டு வைத்தாா். ஏற்பாடுகளை அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் மணிகண்டன் செய்திருந்தாா். இதில், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொறுப்பாளா்கள் சி. மேகநாதன், அகோரம், மணி, பாலகுரு, ரமாபிரபா, அலெக்சாண்டா் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க உறுப்பினா்கள், விவசாய தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT